SRI SARADA AYURVEDIC HOSPITAL


Healthy Recipes

ஜாதிக்காய் பால்

தேவையான பொருட்கள்

  • ஜாதிக்காய் பொடி - ½ டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • பால் - 750 மி.லி
  • சுக்கு பொடி - ½ டீஸ்பூன்
  • ஏலக்காய் - 2
  • வெல்லம் - 2 டீஸ்பூன்

செய்முறை

பாலில் ஜாதிக்காய் பொடி, சீரகம், பொடித்த வெல்லம், சுக்குப்பொடி, ஏலக்காயைச் சேர்க்கவும். பால் சுமார் 500 மி.லி. வரும் வரை காய்ச்சவும்.

குறிப்பு

இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்த பால் தேவையற்ற மனக்குழப்பம், மன அழுத்தம், டென்ஷனைக் குறைக்கும்.


மிளகுப் பால்

தேவையான பொருட்கள்

  • பால் - இரண்டு டம்ளர்
  • தண்ணீர் - ஒரு டம்ளர்
  • சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
  • கிராம்பு - ஒன்று
  • முழு மிளகு - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை

மிளகு, கிராம்பை போட்டு லேசாக வறுத்து ஆறியதும் கரகரப்பாக பொடிக்கவும்.. பால், தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் அத்துடன் கரகரப்பாக பொடித்த பொடியை சேர்த்து நன்கு காய்ச்சி ஒன்றரை டம்ளராக வற்ற விடவும். இப்போது சர்க்கரை, மஞ்சள் பொடி சேர்த்து வடிகட்டி சூடாக குடிக்கவும்.


இஞ்சி கஷாயம்

தேவையான பொருட்கள்

  • உலர்ந்த இஞ்சி - 1 துண்டு
  • மிளகு - 1 ½ டீஸ்பூன்
  • மல்லி விதை - 1 ½ டீஸ்பூன்
  • வெல்லம் - 1 ½ டீஸ்பூன்
  • நீர் - 1 ½ கப்

செய்முறை

இஞ்சி, மல்லி, மிளகைப் பொடித்துக்கொள்ளவும். இஞ்சியை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், மல்லித்தூள், மிளகுத்தூள், வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். இஞ்சி நீரை வடிகட்டி குடிக்கவும்.

குறிப்பு

இஞ்சியை தோல் சீவி சிறிது நேரம் ஃபிர்ஜில் வைத்து பின்னர் உபயோகிக்கவும். இஞ்சி இடிக்கும் போது அதிகளவில் சாறு வீணாகாமல் இருக்கும். சளி, இருமல், பித்தக்காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.


வெற்றிலைச் சாறு

தேவையான பொருட்கள்

  • வெற்றிலை - 30
  • குல்கந்து - 2 டீஸ்பூன்
  • சர்க்கரை - 2 கப்
  • தண்ணீர் - 2 லிட்டர்
  • தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
  • உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

சுத்தம் செய்து காம்பு, நுனி நீக்கிய வெற்றிலையுடன் இஞ்சி, உப்பு, குல்கந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கூழாக அரைத்தெடுக்கவும். பாத்திரதில் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்துக் கரைத்து, அதனுடன் வெற்றிலைக் கூழ் சேர்த்து 15 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு வடிகட்டி ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பருகவும். அதிகமான உணவுகளைச் சாப்பிட்ட பிறகு இதைப் பருகினால் எளிதில் செரிமானமாகும்.


பூனைக்காலி விதை உருண்டை

தேவையான பொருட்கள்

  • பொட்டுக்கடலை - 200 கிராம்
  • பூனைக்காலி விதை - 50 கிராம்
  • உலர்ந்த திராட்சை - 1 மேஜைக் கரண்டி
  • பாதாம் - 5
  • முந்திரி - 5
  • ராகி - 30 கிராம்
  • வெல்லம் - தேவையான அளவு
  • தேங்காய்த் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  • நெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை

கடாயில் பூனைக்காலி விதை சேர்த்து தீயாமல் வறுக்கவும். அதனுடன் பொட்டுக் கடலை, ராகியைச் சேர்த்து வறுக்கவும். சூடு ஆறியவுடன் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். கடாயில் நெய் சேர்த்து, சூடானவுடன் பொடியாக நறுக்கிய உலர்ந்த திராட்சை, பாதாம், முந்திரியைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மாவைச் சேர்த்து ஒன்றாகப் பிரட்டவும். கூடவே தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லத்தைச் சேர்தது பிரட்டவும். சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு

பூனைக்காலி விதை சூரணத்தை 500 மி.கிராம் முதல் 1000 மி.கிராம் அளவைத் தினமும் பாலில் கலந்து அருந்தினால் மேக நோய்கள் குணமாகும்.


நெல்லித்தேன்

தேவையான பொருட்கள்

  • பெரிய நெல்லிக்காய் - 5
  • தேன் - 2 மேஜைக்கரண்டி
  • மிளகுத்தூள் - சிறிதளவு

செய்முறை

நெல்லிக்காயை கொட்டையை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதனை தேனில் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கலக்கவும். சுமார் ஐந்து மணி நேரத்தில் நன்கு ஊறிவிடும். அதன் பிறகு சாப்பிடலாம். நெல்லிக் காயை வேகவைத்து வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு

வைட்டமின் சி, Zinc Carotenes நிறைந்த நெல்லிக் காய் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.


காப்பரிசி

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 2 கப்
  • பொட்டுக்கடலை - 1 கப்
  • வெல்லம் - ½ கப்

செய்முறை

பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நன்றாக வடித்து ஈரப்பசை உள்ள போதே அரிசியை வறுத்தால் அரிசி உப்பிக் கொண்டு வரும். வெல்லத்தில் ¼ கப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும். பாகை வடிகட்டி அழுக்கை நீக்கவும். பாகு தக்காளி பழ பதத்திற்கு மேல் சிறிது கெட்டியானதும் வறுத்த அரிசியைப் போட்டு கலக்கவும். வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


கட்டிப் பருப்பு

தேவையான பொருட்கள்

  • வெல்லம் - ½ கப்
  • பொட்டுக்கடலை - 1 கப்

செய்முறை

வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் அழுக்கை வடிகட்டவும்.

பாகு தக்காளிப்பழ பதத்திற்கு மேல் சற்று கெட்டி யானதும் பாகை பொட்டுக் கடலையின் மேல் விட்டு நன்றாகக் கிளறவும். ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

குறிப்பு

பிறந்த குழந்தையின் அத்தை காப்பரிசி, கட்டிப் பருப்பும் செய்து தர வேண்டும். ஆசிர்வதிக்க வரும் விருந்தினர்களுக்குக் கொடுப்பார்கள். குழந்தைகளுக்குத் தொட்டில் போடும் போதும், காது குத்தலுக்கும் செய்யும் விசேஷபட்சணம் காப்பரிசி, கட்டிப்பருப்பு.


கார நவதானியம்

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு - 1 கப்
  • வெள்ளைக்காராமணி - 1/2 கப்
  • பச்சை பயறு - 1/2 கப்
  • மொச்சை - 1 கப்
  • வெள்ளை கொண்டைக்கடலை - 1/4 கப்
  • வேர்க்கடலை - 1/2 கப்
  • முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
  • ரீஃபைன்ட் ஆயில் - 1/2 லிட்டர்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  • பிளேக் சால்ட் - 1 பின்ச்
  • உப்பு - சுவைக்கு

செய்முறை

பயறுவகைகளை தனித்தனியாக முதல் நாளிரவே ஊற விடவும். மொச்சை மட்டும் தோலுரித்துக்கொள்ளவும். சிறிது கடினமாக இருந்தாலும் நன்கு ஊற வைத்தால் சற்று சுலபமாக உரிக்க வரும். மற்ற அனைத்துப் பயறு வகைகளையும் நன்கு அலம்பி தண்ணீர் வடிய விட்டு நிழல் உலர்த்தலாக வைக்கவும். எண்ணெய்யை வாணலியில் விட்டு நன்கு காய்ந்ததும் பயறு வகைகளை சிறிது. சிறிதாகப் போட்டு கரகரப்பாக வறுத்து எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் நன்கு வடிய விடவும். கடைசியாக கறிவேப்பிலையை பொரித்துப்போடவும். உப்பு, காரம் சேர்த்து கலந்து ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு வைக்கவும்.


திரிகடுகு சூரணம்

தேவையான பொருட்கள்

  • சுக்கு - 50கிராம்
  • மிளகு - 50கிராம்
  • திப்பிலி - 50கிராம்
  • பனை வெல்லம் - 50கிராம்
  • தேன் - ஒரு டீஸ்பூன்

செய்முறை

பால் சுக்கு, நல்ல கறுப்பு மிளகு (வால் மிளகு 25கிராம், கறுப்பு மிளகு 25 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்), திப்பிலி (அரிசி திப்பிலி அல்லது கண்டந்திப்பிலி) ஆகிய மூன்றையும் வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடி கால் டீஸ்பூன் இதனுடன் தேன் ஒரு டீஸ்பூன் என்ற விகிதத்தில் காலை வேளையில் எடுக்கலாம் அல்லது பனை வெல்லம் சேர்த்துப் பொடித்தும் உண்ணலாம். எந்த வகையில் உண்டாலும் மருத்துவப் பலன் மிகுதியாகக் கிடைக்கும்.


கடுக்காய் மூலிகை பொடி தேநீர்

தேவையான பொருட்கள்

  • கடுக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்
  • தண்ணீர் - 200 மில்லி
  • பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்
  • புதினா இலைகள் - 5
  • துளசி இலைகள் - 5

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டுச் சூடாக்கி அதில் கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசி சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதித்ததும் வடிகட்டி பருகவும். இந்தத் தேநீரைக் காலை வேளையில் தினசரி தேநீருக்குப் பதிலாகப் பருகி வர, புத்துணர்சை உடனடியாக உணர முடியும்.


சீரக டீ

தேவையான பொருட்கள்

  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • பனம் கற்கண்டுத்தூள் - 2 தேக்கரண்டி

செய்முறை

வாணலியை சூடாக்கி அதில் சீரகத்தை இட்டு நிறம் மாறும் வரை கருகும் நிலையில் எடுக்கவும். ஒன்றிரண்டாக இடிக்கவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் நீர் எடுத்து கொதிக்கவிட்டு, அந்த நிலையில் சீரகத்தை இட்டு மூடி வைத்து ஒரு கப் டீயாக சுண்டும் வரை மெல்லிய தீயில் வைத்து இறக்கவும். வடிகட்டி பனம்கற்கண்டு தூள் சேர்த்து சுவைக்கவும்.

குறிப்பு

நன்கு பசி எடுக்கும். தலைசுற்றல், வாந்தி உணர்வு நீங்கும். வயிறு உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை குறையும்.


அறுகு நோய் எதிர்ப்பு பானம்

தேவையான பொருட்கள்

  • அறுகம்புல் - ஒரு சிறிய கட்டு
  • இஞ்சி - ஒரு துண்டு (தோல் சீலவும்)
  • எலுமிச்சைப்பழம் - பாதியளவு
  • தேன் - ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  • தண்ணீர் - 200 மில்லி

செய்முறை

அறுகம்புல்லைத் தண்ணீர்விட்டு நன்கு சுத்தம் செய்யும். பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில் அறுகம்புல், இஞ்சி சேர்த்து அதனுடன் 200 மில்லி தண்ணீர்விட்டு நன்கு மையாக அரைத்து வடிகட்டவும். அதனுடன் மஞ்சள்தூள் தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பருகி வர, உடலின் நோய் எதிரிப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.


பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

  • பொன்னாங்கண்ணி கீரை - 2 கப் சிறிது காம்புடன் ஆயவும்
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - ¼ டீஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - 2
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

கீரையைக் காம்புடன் நீளமாக எடுத்து சிறிது உப்பு தெளித்து ஆவியில் வேக விடவும். வெந்ததும் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து கீரையைப் போட்டு லோசாகப் பிரட்டவும். சிறிது உப்பு தூவவும்.


நெய் அப்பம்

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு – 1 கப்
  • தயிர் – 1 கப்
  • நெய், எண்ணெய் – பொரிப்பதற்கு
  • சர்க்கரை பொடித்தது – ½ கப்
  • ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
  • உப்பு – 1 சிட்டிகை
  • தேங்காய்ப் பால் – ½ கப்

செய்முறை

அகன்ற பாத்திரத்தில் நெய். எண்ணெய் தவிர அனைத்தையும் போட்டு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு., தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் நெய். எண்ணெய் விட்டு சூடானதும், குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். திருப்பிப் போட்டு பொரித்தெடுத்து வடிகட்டி சட்டியில் போட்டு எடுத்து பரிமாறவும்.


சுண்டைவற்றல் குழம்பு

தேவையான பொருட்கள்

  • சுண்டைவற்றல் - 1 கைப்பிடி
  • தேங்காய் விழுது - 5 ஸ்பூன்
  • உளுந்து அப்பளம் - 1
  • குழம்பு மிளகாய் பொடி - 4 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 4
  • உப்பு - தேவைக்கு
  • புளி - எலுமிச்சை அளவு
  • கடுகு - 2 டீஸ்பூன்
  • வெல்லம் - சிறிதளவு
  • பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
  • துவரம்பருப்பு - 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் புளியை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூன்று முறை கரைக்கவும். (மொத்தமாக கரைக்க கூடாது) வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு ,வெந்தயம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, துவரம் பருப்பைச் சேர்த்து வறுக்கவும். பின்னர் அப்பளத்தை உடைத்துப் போட்டு, அது பொரிந்ததும் மிளகாய்த்தூளை சேர்க்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு, சிறிய வெல்லக்கட்டியைச் சேர்க்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, சுண்டை வற்றலைப் போட்டு வறுத்து, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து புரட்டி, அதை புளித்தண்ணீர் கொதிக்கும் சட்டியில் ஊற்றி கலந்து உடனே அடுப்பை அணைத்து விடவும்.


Our Vision

Our vision is to rejuvenate and revitalize lives through the profound wisdom of Ayurveda. We aspire to be a beacon of health and happiness, empowering individuals to embrace their well-being and lead a balanced life.

Testimonials

Discover the success stories of our satisfied patients. Read testimonials from individuals who have experienced remarkable improvements in their health and quality of life through our Ayurvedic treatments.

Contact Us

Are you ready to embark on a transformative journey towards health and well-being? Get in touch with our team today to schedule a consultation or to learn more about our services.

Location: Balamore Road, Derisanamcope, Azhagiapandiapuram Post, Kanyakumari Dist – 629851, Tamilnadu, India

Phone: 04652 – 282239 / 282449 / 9751691516

Email: mahadaevan101@gmail.com

Website: www.saradaayurveda.in

Follow Us on Social Media

Stay connected and receive regular updates, health tips, and more by following us on social media.

At Sri Sarada Ayurvedic Hospital, we open the doors to ancient healing practices and guide you towards a healthier, more balanced life.

www.facebook.com/mahadevan.lakshmanasarma

www.facebook.com/vaidyanadham2014